சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படிஉயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
சங்க மாநில தலைவர் சேதுசெல்வம், பொதுச்செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று வேறு பணிக்குசென்றுவிட்டனர்.
அவர்களை உயர்நிலை பள்ளி தலைமைஆசிரியர் என்ற போர்வையில் மீண்டும் பழைய பணியில் அமர்த்த விதிகளில் இடமில்லை எனவும், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனை நிறுத்தி வைக்கவும், ரத்து செய்யக் கோரிய மேல்முறையீட்டு மனுவை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆகவே தாமதமின்றிஉயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக