இந்த வலைப்பதிவில் தேடு

மாவட்டத்தில் 231 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலி

வெள்ளி, 29 மே, 2026

ஈரோடு மாவட்டத்தில், 231 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தமிழ், 48, ஆங்கிலம், 13, கணிதம், 36, அறிவியல், 91, சமூக அறிவியல், 43 என மொத்தம், 231 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதே போல் இடைநிலை ஆசிரியர் பணியிடம், 11 காலியாக உள்ளது. இந்த பணியிடங்களுடன்தான் கல்வி ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த இடங்களுக்கு கவுன்சிலிங் மூலம் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.


குறிப்பாக அறிவியல் மற்றும் தமிழ் பாடத்தில் தான் அதிக ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இவற்றுக்கு விரைந்து ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்று, பி.டி.ஏ., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent