சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு 40 குழந்தைகள் சாப்பிடுகின்றனர். காலை உணவு 35 குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை ரவை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் இது தொடர்பாக கூறி சமையல் ஊழியர்கள் காமாட்சி, சுமதி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து திடீரென சமையல் அறையை பூட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை உணவு சாப்பிட வந்த குழந்தைகள் தவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி அதிகாரிகளும் சாப்பிட்டனர்.
இது பற்றி தாசில்தார் தமிழரசி கூறுகையில், கோமதி என்பவர் பெற்றோர் கழக ஆசிரியர் உறுப்பினராக உள்ளார். மேலும் அதே பள்ளியில் தூய்மை பணியாளராகவும் உள்ளார். சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக