ஆசிரியரில்லாத பணியிடங்களுக்குத் தேசிய தேர்வு முகமை இந்தி மொழி தேர்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழி சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில்: தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்குத் தேசிய தேர்வு முகமை இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும்.
பன்முகத்தன்மையை அப்பட்டமாக அவமதிப்பதாகும். இவ்வாறு இந்தியைத் திணிப்பது தமிழ்நாடு உள்ளிட்ட பிற இந்தி பேசாத மாநில இளைஞர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாக உள்ளது. நியாயமற்ற இந்தி மொழித் தேர்வை ரத்து செய்து, அனைவருக்குமான தேர்வாக இதனை மாற்றுக. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக