இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 14.08.2023

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

 



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புகழ்


குறள் :237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.


விளக்கம்:

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணம் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.


பழமொழி :

Barking dogs seldom bite

குரைக்கின்ற நாய் கடிக்காது


இரண்டொழுக்க பண்புகள் :

1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

ஏழை என்றும் அடிமை என்றும் யாரும் இல்லை சாதியில். இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே. கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே, மனிதர் யாவும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் - பாரிதியார்


பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்?

விடை: s. விஜயலக்ஷ்மி


2.: தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழர் யார்?

விடை: சிவாஜி கணேசன்


English words & meanings :

 Quiz-zi-cal - asking a question through expression not with words. Adjective. ஒன்றை வினவுவதைப் போலக் காணப்படுகின்ற. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு : 

கொத்தமல்லி விதை : கொத்தமல்லி விதை தனியா விதை என்றும் அழைக்கப்படுகிறது.அவை குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இன்சுலின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.


நீதிக்கதை


ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனையையும் ஒரு நாயையும் வளர்த்தார்களாம். 


பூனையை விட நாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்களாம். அந்த வீட்டில் உள்ள பிள்ளைகளும் நாயிடம் அதிக அன்பை காட்டியதாம்.


 அதைப் பார்த்த பூனை மிகவும் பொறாமை பட்டு நாயிடம் சென்று என்னதான் அவர்கள் உன்னை அதிகமாக நேசித்தாலும் நீ ஒரு நாய் யாரை தாழ்த்தி திட்ட வேண்டும் என்றாலும் நாய் என்று தான் திட்டுவார்கள் பூனை என்று திட்ட மாட்டார்கள் என்று கூறி, உன்னுடைய தரம் இதுதான் என்று பூனை தன்னுடைய தரத்தை உயர்த்தி சொல்லிக் கொண்டிருந்ததாம். 


அதற்கு நாய் என்னதான் என்னை வைத்து மனிதர்கள் திட்டினாலும் விமர்சனங்கள் செய்தாலும் போடா நாயே வாடா நாயே என்று கூறினாலும் அந்த விமர்சனங்களையும் அவமானங்களையும் உரமாக எடுத்துக்கொண்டு நான் விருட்சமாய் வளர்வேன். 


ஏனென்றால் நான்ஒரு நன்றியுள்ள ஜீவன் அல்லவா என்னை மிகுந்த நன்றியுள்ள ஜீவன் என்றே அழைப்பார்கள்  அல்லவா என்று தன்னிடம் உள்ள  நிறைவை கூறியதாம் நாய் . ஆனால் நீமனிதர்கள் வெளியில் செல்லும் பொழுது குறுக்கே வந்தால் உன்னை என்ன சொல்வார்கள் என்று யோசித்துப் பாருங்கள் பூனையாரே என்று நாய் கூறியதாம்.


தலை குனிந்த பூனை மன்னிப்பு கேட்டு சென்றதாம். 


 யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்க கூடாது எல்லோரும் சரி சமம் தான் நாம் இந்த வீட்டில் வாழும் செல்லப்பிராணிகள் ஆகவே இருவரும் ஒற்றுமையாய இருப்போம் என்று கூறி நாய் சென்றதாம்.


இன்றைய செய்திகள் - 14.08.2023

*நல் ஆளுமை விருதுகளை அறிவித்தது தமிழக அரசு - சுதந்திர தினத்தன்று ரூ. 2 லட்சம் பரிசுத்தொகையுடன் முதலமைச்சர்  மு. க. ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். 


*நாங்குநேரி மாணவனுக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்.


*நீட் தேர்வு ரத்துக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்- கவர்னர்  ஆர். என்.  ரவி.


*திருப்பூர் மாவட்டத்தில் உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் 2000 பேர் பங்கேற்பு. 


*சர்வதேச ஹாக்கி தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி. 


*மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


Today's Headlines


*Good governance awards announced by Tamil Nadu Government - on Independence Day Rs. 2 lakh prize money along with awards will be given by Chief Minister  M. K.  Stalin.


 *Nanguneri student is treated by Stanley Doctors -information by Minister Ma.  Subramanian .


 * Governor  R.  N.  Ravi.declared that he will never allow the cancellation of NEET exam


 * 2000 people participated in Pavalakkodi Valli Kummiyattam for world record in Tirupur district.


 *Indian team moved up to the third position in the international hockey rankings.


 *Minister Udayanidhi Stalin inaugurated the International Surfing Competition at Mamallapuram.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent