இந்த வலைப்பதிவில் தேடு

அரசு உதவி பெறும் பள்ளிகள் - உரிமை மீட்பு மாநாடு

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

 



அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான உரிமை மீட்பு மாநாடு செப்டம்பர் 28ஆம் தேதி திருச்சியில் நடைபெற விருக்கிறது. 


அரசு செயல்படுத்தி வருகின்ற 7.5% மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 உயர் கல்வி ஊக்கத்தொகை, காலை உணவுத் திட்டம், கலை இலக்கியப் போட்டிகளில் சம வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து நலத்திட்டங்களையும் அரசு நிதி  உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்திட  வேண்டும். 


1991-ம் ஆண்டிற்குப் பின்னர் தொடங்கப்பட்ட,  தரம் உயர்த்தப்பட்ட தமிழ் வழிப் பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்து கருணாநிதி 2011-ம் ஆண்டு பிறப்பித்த ஆணையினை செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது.


திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹரி பரந்தாமன், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கல்வி ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர் என தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent