தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தமிழ்மணியன் முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்ட தலைவர் குமாரவேல் வரவேற்று பேசினார். இறுதியில் மாவட்ட பொருளாளர் ஜாபர்கான் நன்றி கூறினார்.
கூட்டத்தில், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிமாறுதல் சென்றிடும் வகையில் கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட வேண்டும்.
மதிய உணவு
மாணவர்கள் காலாண்டு தேர்வை எதிர்கொள்ள உள்ள நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இருந்து விடுவித்து, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் திறனை வளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் மதிய உணவு அளித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக