அனைத்து மாவட்ட கலெக்டர்களும், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; எண்ணும் எழுத்தும் திட்டத்தை கண்காணிக்க வேண்டும்' என, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அவர் கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசால் உருவாக்கப்பட்ட, 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். வகுப்பறை சூழலில், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், மன அழுத்தம் இல்லாமலும் இருக்கின்றனரா என்பதை கவனிக்க வேண்டும்.
காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம், சுற்றுப்புறத் துாய்மை, கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும்.
ஆய்வுகளுக்காக பள்ளிப் பார்வை, போன் செயலியை பயன்படுத்தலாம். பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மேற்பார்வை அலுவலர்களும், முதன்மைக் கல்வி அலுவலர் முதல் வட்டாரக் கல்வி அலுவலர் வரை, பள்ளிகளைத் தவறாமல் ஆய்வு செய்வதையும், வகுப்பறைகளை கண்காணிப்பதையும், போன் செயலி வழியே உறுதி செய்யலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக