தீபாவளி விற்பனை தொடங்கியதில் இருந்து தற்போது வரை தங்கம், வெள்ளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 16 வரையிலான இன்னும் 6 நாட்களில் பொருட்களின் விற்பனை இன்னும் சிறப்பாக இருக்கும் என வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தங்கம் விற்பனை கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுவதும் 30 ஆயிரம் கோடி மதிப்புக்கு தங்கம், வெள்ளி விற்பனையாகி உள்ளதாக வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் தந்தேரா தினத்தில் தங்கம், வெள்ளி விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 41 டன் தங்கம், 40 டன் வெள்ளி விற்பனையாகி உள்ளதாக வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் தந்தேரா தினமான நேற்று மட்டும் 5 ஆயிரம் வாகனங்களை மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு தந்தேரா தினத்தில் 32 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசூகி, இந்தாண்டு 55 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 10 ஆயிரத்து 30க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்காகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக