அனைத்து மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் இந்த ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு நவம்பர் 12ஆம் தேதி (ஐப்பசி 26ம் தேதி) ஞாற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் தமிழ் மாதமான ஐப்பசி 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. பொதுவாகவே அமாவாசை அன்று தான் தீபாவளி வரும். ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது.
அதாவது அமாவாசை திதி நவம்பர் 12, 2023, ஞாயிறு, பிற்பகல் 2.44 ஆரம்பம் ஆகிறது. நவம்பர் 13, 2023, ஞாயிறு, பிற்பகல் 2.56 மணிக்கு முடிவடைகிறது. சூரிய உதயம் ஆன பிறகு வரும் அமாவாசையில்தான் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும். அதனால் அமாவாசை தீபாவளிக்கு அடுத்தநாள் தான் என கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக