இந்த வலைப்பதிவில் தேடு

மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன்

ஞாயிறு, 12 நவம்பர், 2023

 



தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளில், பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன.


மாற்றுத்திறனாளிகள், அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகள் வாங்கும் போது, பயனாளியின் பங்கு தொகையாக, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இதற்காக ஆண்டுக்கு, 1,000 நபருக்கு, வட்டியில்லா வங்கி கடன் உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, அரசு சமீபத்தில் அறிவித்தது.


எனவே, பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகைக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ஒருவருக்கு அதிகபட்சம், 1.50 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட உள்ளது.


ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும், வட்டியில்லா கடனாக வழங்க, 1.20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தும், வட்டி தொகையை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக செலுத்தவும் அரசுஉத்தரவிட்டு உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent