இந்த வலைப்பதிவில் தேடு

'ஆன்லைன் ஸ்டிரைக்: ஆசிரியர்கள் அறிவிப்பு

புதன், 1 நவம்பர், 2023

 

தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் அமைப்பின், மாநில கூட்டுக்குழு கூட்டம், இரு தினங்களுக்கு முன் நடத்தப்பட்டது. இதில், மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அதில் கூறியிருப்பதாவது:


தொடக்க கல்வி ஆசிரியர்களின், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டி.பி.ஐ., வளாகத்தில் கடந்த மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி, 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தனர்.


அதனால், போராட்டம் ரத்து செய்யப்பட்டு, விளக்க கூட்டமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், அரசு தரப்பில் பேச்சு நடத்தி, 2 வாரங்கள் ஆன பிறகும், எந்த கோரிக்கைக்கும் உரிய உத்தரவை அரசு வெளியிடவில்லை. அதனால், தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதேபோல், 'எமிஸ்' ஆன்லைன் பதிவு பணிகளில் இருந்து, நவ.,1 முதல் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதற்கும் இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை.


எனவே, இன்று முதல் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு தவிர, வேறு ஆன்லைன் பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடாமல், புறக்கணிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent