இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க செயலி , இணையதளம் - அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார்

புதன், 1 நவம்பர், 2023

 



பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் இல்லா பணியாளர்களுக்கான குறைதீர் புலம் இணையதளத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.


பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 29 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 17 சுருக் கெழுத்து தட்டச்சர் நிலை -3 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளைசர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார். 


இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக 2 லட்சத்து 29,905 ஆசிரியர்கள் , ஆசிரியர் இல்லாத 29,909 ஆசிரி பணியாளர்களுக்கான பணிப் பலன் சார்ந்த கோரிக்கைகளை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க ஏதுவாக , ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குறைதீர் புலம் ( Staff Grievance Redressal'Cell Portal and App ) என்ற செயலி மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கிவைத்தார். 


இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியது : 


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். குறிப்பிட்ட நாள்களுக்குள் கோரிக்கைகளுக்கு அவர்களின் கல்வித் துறை அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்படும் என்றார் அவர் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent