அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்து, தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை கோரி, தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில், பெரம்பலுாரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில், தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசே, வருவாய் துறை நிர்வாகமே, காவல்துறையே நடவடிக்கை எடு. பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில், அத்துமீறி நுழைந்து, துணை இயக்குநர் ஜெயபால், உதவி புவியியலாளர் இளங்கோவன் உள்ளிட்ட அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தும், அவர்கள் மீது கடுமையான வன்முறை தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடு. அரசு பணியாளர்கள் அச்சமின்றி பணியாற்ற உரிய பாதுகாப்பு வழங்கு. மாநில மையம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகம், நகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால், பெரம்பலுாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக