துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே களப்பான்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கவிதா. இவர்களின் மகன் சந்தோஷ், 13, மகள் மதுமிதா, 12. கணேசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சந்தோஷ் கழுகுமலை ஆர்.சி.சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயில்கிறார்.
நவ., 22ல் சமூகவியல் ஆசிரியை ரெமிலா, 49, வீட்டுப்பாடம் நோட்டுகளை வாங்கி சரி பார்த்துக் கொண்டிருந்தார். சந்தோஷ் உட்பட அனைவரது நோட்டுக்களையும் சரிபார்த்த பின், மீண்டும் சந்தோஷ் நோட்டை கேட்ட போது, நோட்டு காணாமல் போயிருந்தது. ஆத்திரமடைந்த ஆசிரியை ரெமிலா, சந்தோஷை கடுமையாக தாக்கியுள்ளார்.
காயமடைந்த மாணவன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவிதா புகாரின்படி, கழுகுமலை போலீசார் ஆசிரியை ரெமிலா மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக