புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே, கொப்பம்பட்டியை சேர்ந்த வீரமுத்து, 49, மகன் விஷ்ணுகுமார், 16. அவர், கீரனுார் அரசு பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இரு நாட்களுக்கு முன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணுகுமார் துாக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து, உடையாளிபட்டி போலீசார் விசாரித்தனர்.
விஷ்ணுகுமாரின் பெற்றோர் கீரனுார் போலீசில் கொடுத்த புகாரில், 'பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள், ஜாதி ரீதியாக விஷ்ணுகுமாரை துன்புறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். உடனடியாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, தற்கொலை வழக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மாற்றப்பட்டு, ஜாதி ரீதியாக துன்புறுத்திய மாணவர்கள் குறித்து, போலீசார் விசாரணை செய்கின்றனர். தனியார் உண்மை அறியும் குழுவினர், சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக