கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், சிறுபான்மையின மாணவி ஒருவரை பயிற்சி ஆசிரியை ஒருவர் தரக்குறைவாக திட்டியது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர்.
சம்பவம் குறித்து, இன்று காலை அசோகபுரம் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சி.இ.ஓ., பாலமுரளி மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக