மூன்று மாதங்களில் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை துவங்க, மாவட்ட கல்வித்துறை களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.வரும், 2024ல் லோக்சபா தேர்தல் நடப்பதால், பொதுத்தேர்வு முன்கூட்டியே மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது.
தேர்வுக்கு இன்னமும் மூன்று மாதம் மட்டுமே உள்ள நிலையில், தேர்வுக்குரிய பணிகளை தேர்வுத்துறை முழு வீச்சில் துவங்கியுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட கல்வித்துறைக்கு அவ்வப்போது அறிவுறுத்தல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், செய்முறைத் தேர்வுகள் பிப்., மாதம் துவங்க உள்ளதால், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில் நுட்ப ஆய்வகங்களில், அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை நிறுவ வேண்டும். 1,500 ரூபாய் கட்டணத்தில் பிராட்பேண்ட் இணைப்பை நிறுவி, அப்டேட் செய்ய வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு மூலம் இத்தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தேர்வரின் வருகைப் பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல்திட்டங்கள், கல்வி இணைச் செயல் பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்க வேண்டும், என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக