பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், மரங்கள் மற்றும் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நாளை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக