இந்த வலைப்பதிவில் தேடு

இனி 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கு அனுமதி இல்லை!

வெள்ளி, 12 ஜனவரி, 2024

 

கல்வி நிறுவனங்களில் வருகின்றப் கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்புகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.


தற்போது கல்வி நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.


மேலும், சில கல்வி நிறுவனங்களில் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளன. அதன்படி படிக்கும் மாணவர்கள் பி.எஸ்.சி. அல்லது பி.ஏ. படிப்புடன் பி.எட் படிப்பையும் மேற்கொள்வார்கள்.


இந்த நிலையில், 2024-25 கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்பை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


அதற்கு பதிலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் படிப்பை மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent