இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி

வெள்ளி, 12 ஜனவரி, 2024

 



வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர், பெயின்டர். இவருடைய் இளைய மகள் யோகேஸ்வரி(7), தார்வழி அருகேயுள்ள கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.


இதில், பங்கேற்க யோகேஸ்வரி தந்தை மற்றும் அக்காவுடன் பள்ளிக்கு சென்றார். வரி பிளாஸ்டிக் பந்து கொண்ட போட்டியில் யோகேஸ் பங்கேற்று விளையாடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். 


அதிர்ச்சியடைந்த சுதாகர் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent