தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்-றத்தின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்-குமார், செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் வழிகாட்டுதலுடன், தமிழ-கத்தில், 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்-நுட்பங்களை பயன்படுத்தியும், உள்நாட்டு முன்-னணி பெருநிறுவன கணினி தொழில் நுட்ப முக-மைகளை ஈடுபடுத்தியும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களை கொண்டும், தன்னார்வலர்களை பணியமர்த்தியும், உள்ளூர் மகளிர் சுய உதவிக்கு-ழுக்களை பயன்படுத்திக்கொண்டும், 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்-கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் கேட்-டுக்கொள்கிறோம்.
கல்விக்காக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் கல்வி நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெ-டுப்பு பணிகளுக்கு, தொடக்க மற்றும் நடுநி-லைப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிட மத்திய, மாநில அரசுக-ளிடம் வலியுறுத்துகிறோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மாநிலத்தின் தொடக்க மற் றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, வரும் ஜூலை, 4, 5 ஆகிய, இரண்டு நாட்களும் தேர்வு நடக்கிறது. இத்தேர்வு-களை, பணியாற்றும் ஆசிரியர்களில் பெரும்பகு-தியினர் எழுதுவதால், இத்தேர்வை காரணம் காட்டி, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க-ளுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்-கைகள் தொடக்கக்கல்வி இயக்குனரால் ஒத்தி-வைக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் ஜூலை, 22 முதல், நாமக்கல் மாவட்டத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக