திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:44 குற்றங்கூறாமை
குறள் எண்:437
குறள்:
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
பொருள்:
செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும் .
பழமொழி :
A guilty conscience needs no Accuser
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .
2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.
பொன்மொழி :
எழுந்திருங்கள், விழித்திருங்கள், இலக்கை அடையும் வரை நிறுத்தாதீர்கள்." - சுவாமி விவேகானந்தர்
Thought for the Day :
Arise, awake, and stop not till the goal is reached."
பொது அறிவு :
1. இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த அலங்கார ஊர்திக்கான முதல் பரிசு பெற்ற மாநிலம் எது?
மகாராஷ்டிரம்.
2. குதிக்க முடியாத விலங்கு எது?
யானை.
English words :
Accelerate – Speed up, வேகப்படுத்து.
Allocate – Assign, ஒதுக்கு.
புவியியலும் சுற்றுசூழலும் :
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்தியாவில் மூன்று வகை ஆட்சித் துறைகள் உள்ளன:
- சட்டமன்றம் (Legislature)
- நிர்வாகம் (Executive)
- நீதித்துறை (Judiciary)
NMMS :
எஎரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக _______________ க்குச் சமமாகும்.
(1) ஒரு ரேடியன்
(2) ஒரு லுமென்
(3) ஒரு கேண்டிலா
(4) ஒரு ஸ்ட்ரேடியன்
விடை: (3) ஒரு கேண்டிலா
ஜூன் 25
வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள்
விஸ்வநாத் பிரதாப் சிங் (சூன் 25 1931 - நவம்பர் 27, 2008) இந்தியக் குடியரசின் 7 ஆவது இந்திய பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.
2023-இல் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங்குக்கு முழு உருவச் சிலை அமைக்கும் அறிவிப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.
வி. பி. சிங்கை "இந்தியத் தலைமை அமைச்சர்களிலேயே மிகவும் அரிதான தலைமை அமைச்சராக இருந்தவர்" எனப் புகழ்ந்தார் தமிழறிஞர் கி. குணத்தொகையன்
நீதிக்கதை
🌿 மன்னிக்கும் மனம்
ஒரு கிராமத்தில் அருண் மற்றும் வருண் என்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர்.
ஒருநாள் பள்ளியில் ஆசிரியர் கொடுத்த அழகான ஓவியத்தை அருண் மிகவும் கவனமாக வரைந்து கொண்டிருந்தான். அப்போது விளையாட்டாக ஓடிவந்த வருண் தவறுதலாக அருணின் ஓவியத்தின் மேல் தண்ணீரைக் கொட்டிவிட்டான்.
அருணின் ஓவியம் முழுவதும் கெட்டுப்போயிற்று.
வருண் மிகவும் வருந்தினான்.
"அருண், என்னை மன்னித்துவிடு. நான் வேண்டுமென்று செய்யவில்லை," என்று கண்ணீர் மல்கக் கூறினான்.
அருணுக்கு முதலில் கோபம் வந்தது. ஆனால் சிறிது நேரம் யோசித்தான்.
"தவறு எல்லோரிடமும் நடக்கலாம். நீ உண்மையாக வருந்துகிறாய். நான் உன்னை மன்னிக்கிறேன்," என்றான்.
அந்த வார்த்தையைக் கேட்ட வருண் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இருவரும் மீண்டும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
அடுத்த நாள் ஆசிரியர் இந்த நிகழ்வைப் பற்றி அறிந்து கொண்டு கூறினார்:
"கோபத்தை வைத்துக்கொள்வதை விட மன்னிப்பது பெரிய குணம். மன்னிக்கும் இதயம் உள்ளவர்களே உண்மையான வெற்றியாளர்கள்."
நீதிக்கருத்து
"மன்னிப்பு பலவீனம் அல்ல; அது பெரிய மனதின் அடையாளம்."
"பிறரின் தவறுகளை மன்னிக்கக் கற்றுக்கொண்டால், நம் நட்பும் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்
இன்றைய செய்திகள் - 25.06.2026
🗒️வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு.
🗒️ எத்தனால் கலந்த பெட்ரோல் ஆல் வாகன காப்பீடு பாதிக்கப்படாது - மத்திய அரசு உத்தரவாதம்
🗒️ நிதித்துறை தொழில்நுட்பம் இரு கட்டமைப்புகளில் இந்தியா முன்னேற்றம் - நெதர்லாந்து ராணி மாக்ஷிமா பாராட்டு
விளையாட்டுச் செய்திகள்
🏀புரோ ஆக்கி லீக்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி. இந்திய அணி, அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்தை சந்திக்க உள்ளது.
🏀ஐசிசி ஒருநாள் தரவரிசை: கோலியை முந்திய சுப்மன் கில்
ஐசிசி ஒருநாள் போட்டிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
Today's Headlines
🗒️ Velachery Road to be renamed after Major Mukund Varadarajan: Chief Minister Vijay has issued orders to name the road after Major Mukund Varadarajan.
🗒️ Vehicle insurance will not be affected by ethanol-blended petrol: The Central Government has assured that the use of ethanol-mixed petrol will not impact vehicle insurance coverage.
🗒️ India praised for progress in financial technology and digital infrastructure: Queen Máxima of the Netherlands has commended India's achievements in these two sectors.
Sports News
🏀 Pro Hockey League: India secured a thrilling victory over Pakistan. The Indian team will face England tomorrow in its next league match.
🏀 ICC ODI Rankings: Shubman Gill has overtaken Virat Kohli and moved up to the 2nd position in the ICC One Day International rankings.
Prepared By
Covai women ICT_போதிமரம்

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக