தேசிய ஆசிரியர் விருதுகள் 2026 - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் இணையவழியில் சுய-பரிந்துரை செய்வதற்கான செயல்முறை கையேடு
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
National Awards to Teachers - DSE Proceedings, Revised Guidelines for Selection of Teachers for National Awards to Teachers & Instruction Manual for Online Self-nomination NATIONAL TEACHERS' AWARDS 2026
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2026-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தங்கள் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களும் ஜூலை 10-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வுசெய்து தேர்வு பட்டியலை ஜூலை 14 முதல் 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் அனுப்ப வேண்டும். மாவட்ட தேர்வுக்குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி தலைவராகவும், மாநில பிரதிநிதியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெறுவர்.
உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எவ்விதமான புகாருக்கும் இடமில்லாமல் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக