சிதம்பரம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் முன்விரோதம் காரணமாக தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அடுத்த திடல் வெளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு என்பவர் மகன் அருண் பாண்டியன் (28). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி கடந்த ஒரு மாதம் முன்புதான் குழந்தை பிறந்த நிலையில் அருண்பாண்டியன் 11-ம் வகுப்பு பள்ளியில் படிக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த சக பள்ளி மாணவன் சதீஷ் என்பவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்போது வழக்குப் பதிவு செய்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று நேற்று(ஜன. 17) சந்திரமலை பகுதி அருகே அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டிருக்கும்போது சம்பவ இடத்திற்கு சதீஷ் வந்த நிலையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் சதீஷ், அருண் பாண்டியனை கத்தியால் வெட்டியதில் தலை துண்டிக்கப்பட்டது, சம்பவம் குறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே சென்று உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கடலூரில் இருந்து மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தலைமறைவாகியுள்ள குற்றவாளி சதீஷை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையில் இரண்டு இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் பகுதியில் குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக