இந்த வலைப்பதிவில் தேடு

SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல் - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

 




உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள யுஜிசி என அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவில் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன சமூக, பழங்குடியின மாணவர்களுக்கும், விண்ணப்பதாரர்களுக்கும் வஞ்சகம் செய்து, அந்த மக்களை அழித்து ஒழிக்கும் பாஜகவின் முயற்சியை சமத்துவம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்



பாஜகவின் ‘சப் கா விகாஸ்’ (அனைவரின் வளர்ச்சிக்காக) என்பதன் உண்மை முகம் இதுதான்.

இதுவரை காலைப் பிடித்து இழுத்தவர்கள் இப்போது உச்சந்தலையில் கை வைத்து விட்டார்கள். இந்திய நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவந்த இட ஒதுக்கீட்டு கொள்கையை கொலை செய்வதற்கான சம்மட்டி அடி இது.


சமூகத்தில் நிலவும் சாதி மேலாதிக்கத்திற்கு சட்டபூர்வமாக அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்குவதே பாஜகவின் ராம ராஜ்யத்தில் ‘அனைவருக்குமான வளர்ச்சி’ என்று இதன் மூலம் பொருள் கொள்ளப்படுகிறது



உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நீக்கி, இட ஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பதாரர்கள் இல்லாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent