தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று (பிப்.,19) 2024-25 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஒரு ரூபாயில் வரவு:
இதில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலமாக 43.4 சதவீதமும், பொதுக்கடன் மூலமாக 32.4 சதவீதமும், மத்திய வரிகளின் பங்கு மூலமாக 11.1 சதவீதமும், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் மூலமாக 6.8 சதவீதமும், மத்திய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் மூலமாக 5.2 சதவீதமும், கடன் வசூல் மற்றும் மூலதன வரவு மூலமாக 1.1 சதவீதமும் வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கிறது.
ஒரு ரூபாயில் செலவு:
அதேபோல், உதவி தொகைகள் மற்றும் மானியங்களுக்காக 32.4 சதவீதமும், சம்பளங்களுக்காக 18.7 சதவீதமும், வட்டி செலுத்துவதற்காக 14.1 சதவீதமும், மூலதன செலவாக 10.5 சதவீதமும், கடன்களை திருப்பி செலுத்துவதற்காக 9.1 சதவீதமும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்களுக்காக 8.3 சதவீதமும், கடன் வழங்குவதற்காக 3.6 சதவீதமும், செயல்பாடுகளும் பராமரிப்புகளுக்காக 3.3 சதவீதமும் செலவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக