பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் தியோடர் ராபின் சன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக