இந்த வலைப்பதிவில் தேடு

பிளஸ் 1 வேதியியலில் ‘சென்டம்’ குறையும்

வெள்ளி, 22 மார்ச், 2024

 

பிளஸ் 1 வேதியியல் தோ்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததால் ‘சென்டம்’ பெறும் மாணவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா். 


பிளஸ் 1 பொதுத்தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேதியியல் பாடத்துக்கான தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தோ்வு எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். இது குறித்து அவா்கள் கூறியது: வேதியியல் வினாத்தாளில் மொத்தம் 39 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. 15 ஒரு மதிப்பெண் வினாக்களில் 10 வினாக்கள் எளிதில் பதிலளிக்கும் வகையில் இருந்தது; 


ஆனால் மூன்று வினாக்கள் கடினமாகவும், இரு வினாக்கள் சற்று எளிதாகவும் இருந்தது. 2 மதிப்பெண் பகுதியில் 20-ஆவது வினா (இனக்கலப்பு) சற்று கடினமாக இருந்தது. அதேவேளையில் கட்டாய வினா உள்ளிட்ட பிற கேள்விகள் எளிதாக இருந்தன. அதேபோன்று மூன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் பாடப் பகுதியில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக நன்கு படிக்கும் மாணவா்கள் வேதியியலில் 90 மதிப்பெண்களுக்கும் மேல் எளிதாக பெற முடியும் என்றனா். 


இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில், வேதியியல் வினாத்தாளில் சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவா்கள் கூட 60 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற முடியும். அதேவேளையில் ஓரிரு ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததால் ‘சென்டம்’ பெறுவது கடினம் என தெரிவித்தனா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent