லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கவுள்ள நிலையில், ஏப்., இரண்டாவது வாரத்திற்குள் ஆண்டுத்தேர்வுகளை நடத்தி முடித்து, கோடை விடுமுறை அறிவிக்க பள்ளி கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது.
கடந்த, 4ம் தேதி, துவங்கிய பிளஸ் 2 தேர்வு, 22ம் தேதி நிறைவு பெறுகிறது. பத்தாம் வகுப்புக்கு, 25ம் தேதி துவங்கும் தேர்வு ஏப்., முதல் வாரம் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்., 19ம் தேதி நடக்குமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிகளில் ஓட்டுச்சாவடி அமைப்பதால், ஏப்., இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்துக்குள் துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புக்கு ஏற்கனவே அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தனித்தனியே அட்டவணை தயாரித்து விரைவில் வெளியிடப்பட உள்ளது.
வழக்கமாக, மே1 முதல் மே31 வரை கோடை விடுமுறை விடப்படும். அடுத்த கல்வியாண்டுக்கு, ஜூன்1 முதல் 5ம் தேதிகளுக்குள் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், நடப்பாண்டு லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால், ஏப்., 19ல் தேர்தல் நடக்கவுள்ளது.
அதற்கு முன்பாக தேர்வுகளை முடிக்க உள்ளதால், ஏப்., மாதம் பத்துக்கும் அதிகமான நாட்கள், மே மாதம், 31 நாட்கள் விடுமுறை வரும். ஓட்டு எண்ணிக்கை, 4ம் தேதி நடக்கவுள்ளதால், பள்ளிகள் திறப்பு, தள்ளி போகும் வாய்ப்புள்ளது. இதனால், கூடுதல் கோடை விடுமுறை கிடைக்க உள்ளதால், குட்டீஸ் இப்போதே குஷியாகியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக