இந்த வலைப்பதிவில் தேடு

மாற்றுப் பணி ஆசிரியா்களுக்கு முக்கிய உத்தரவு.

ஞாயிறு, 10 மார்ச், 2024

 



மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் கல்வியாண்டின் இறுதி நாளில் அவரவா் பள்ளியில் சென்று வேலையில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 


பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு சில முதுநிலை, பட்டதாரி மற்றும் இதர ஆசிரியா்கள் கடந்த ஆண்டில் பல்வேறு காரணங்களை முன்வைத்து மாற்றுப் பணி வழங்கக் கோரி விண்ணப்பங்களை சமா்ப்பித்தனா். அதையேற்று விண்ணப்பித்த ஆசிரியா்களுக்கு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டு(2023-2024) முடியும் வரை மாற்றுப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கல்வியாண்டு முடிவடையவுள்ளது. 


இதையடுத்து மாற்றுப் பணியில் சென்ற அனைத்து வகை ஆசிரியா்களும் கல்வியாண்டின் இறுதி நாளுக்கு முந்தைய தினத்தில் தற்போதைய பணியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதன்பின் கடைசி வேலைநாளில் அவரவா் பள்ளிகளில் சென்று பணியில் சேர வேண்டும். 


இது தொடா்பாக மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent