இந்த வலைப்பதிவில் தேடு

"தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யுங்க" - கறார் காட்டிய சட்டசபை மதிப்பீட்டு குழு

வெள்ளி, 8 மார்ச், 2024

 

 


தமிழக அரசு சார்பில் திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவை கள், மேம்பாட்டு திட்டங்களை செயல் படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை கண்காணிக்கவும், ஆய்வு செய்யும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவராக உள்ள அன்பழகன் தலைமையிலான குழு நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடை அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தபோது, கழிவறை சுத்தம் இல்லாததால் தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டார்.


வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடை அரசு தொடக் கப்பள்ளிக்கு சென்ற மதிப்பீட்டுக்குழுத் தலைவர் அன்பழகன் அங்குள்ள கழிவ றைக்கு சென்று பார்த்தார். கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்ததை பார்த்து கோபத்திற்கு ஆளான அவர், பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய் யுங்கள் என்றார்.


பதறி போன தலைமை ஆசிரியரிடம் 'உங்கள் வீடாக இருந்தால் இதுபோல் வைத்திருப்பீர்களர் என ஒரு பிடிபிடித்தார். அப்போது சுத்தம் செய்ய ஆள் இல்லை என்றும், உப்பு தண்ணியாக உள்ளது என்றும் கூறினார். உடனடியாக கலெக்டரிடம் தெரிவித்து 100 நாள் வேலைத்திட்டம் மூலம் தூய்மை செய்ய ஆள் நியமிக்கவும். டேங்க் அமைத்து தண்ணீர் ஏற்பாடு செய்ய பரிந்துரை செய்தார்.


இந்த அதிரடி நடவடிக்கையால் பள்ளி மாணவர்கள் நிம்மதி அடைந்தனர். இது போல் அடுத்தடுத்த ஆய்வுகளிலும் அலுவலர்களை கேள்விகளை கேட்டு குழுவினர் அதிர வைத்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent