இந்த வலைப்பதிவில் தேடு

இப்பவே கண்ணைக் கட்டுதே - தமிழ்நாட்டில் மேலும் வெப்பம் அதிகரிக்கும்!

வெள்ளி, 8 மார்ச், 2024

 



கடந்த சில நாட்களாக வெப்பம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் நேற்றை விட இன்று இரண்டு முதல் மூன்று டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் மழை, பனிக் காலம் நிறைவு பெற்று கோடைக்காலம் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக கடந்த சில நாட்களாக கோடை வெயில் உச்சத்தைத் தொட்டு வருகிறது. குறிப்பாக நாமக்கல்,ஈரோடு,  சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை  உள்ளது. 


தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. பல மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் நேற்று  95 டிகிரி பாரன்ஹீட் வரை  வெப்பம் நிலவியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 


இந்த வருடத்தில் நேற்று அதிக வெப்பமான நாட்களில் ஒன்றாக இருந்தது. நேற்று 39 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை கடந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மீனம்பாக்கத்தில்  மாநிலத்திலேயே அதிக வெப்பம் பதிவாகியிருந்தது. இன்றும் அதைவிட அதிக வெப்பநிலையுடன் மீனம்பாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொடலாம். இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று முதல்  கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாமக்கல்லில் இந்த ஆண்டில் முதல் கட்டமாக வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி உச்சத்தைத் தொட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent