இந்த வலைப்பதிவில் தேடு

CPS ரத்து வழக்கு - நிதித்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.

புதன், 6 மார்ச், 2024

 



புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரும்  வழக்கில்  இரண்டு வாரங்களில் எதிர்வாத உரையை  தாக்கல் செய்ய தமிழக நிதித்துறை செயலாளருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை  உத்தரவு.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில்  திண்டுக்கல்லை சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமர்விற்கு முன்பாக (05.02.2024) விசாரணைக்கு வந்தது. 


விசாரணையின் போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் தமிழக நிதித்துறை சார்பில் எதிர்வாத உரை (Counter affidavit) தாக்கல் செய்யாமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த நீதியரசர்கள் இரண்டு வாரங்களில் நிதித்துறை செயலாளர் சார்பில் எதிர்வாத உரை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


 மேலும், வழக்கில் மூன்றாம் பிரதிவாதியான மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்  அவர்களால் 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட எதிர்வாத உரை நிதித்துறை செயலாளருக்கும் சேர்த்து ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துவிட்டனர். 


அதேபோல கல்வித்துறை சார்ந்த அரசு வழக்கறிஞர் ஆஜரானபோது இனி நிதித்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் கூறி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent