இந்த வலைப்பதிவில் தேடு

Election Training - 2 ம் கட்ட பயிற்சி தேதியை மாற்ற வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

திங்கள், 1 ஏப்ரல், 2024

 



ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி ஏப்.,7 ல் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடக்கிறது. தேர்தலின் போது ஓட்டுச்சாவடிகளில் அதிக அளவில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணிபுரிவர். இவர்களுக்கு ஓட்டுச்சாவடி குறித்து முதற்கட்ட பயிற்சி மார்ச் 24ல் நடந்தது. 2வது இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஏப்.,7 ல் நடக்கிறது.


பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் கூறுகையில், மாநிலத்தில் 10ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இவர்களுக்கு ஏப்.,8ல் சமூக அறிவியல் தேர்வு நடக்க உள்ளது. 


தேர்தல் ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு ஏப்.,7 ல் நடத்த திட்டமிட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு 2ம் கட்ட பயிற்சி வகுப்பை தேதி மாற்றி அறிவிக்க வலியுறுத்தி உள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent