இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 05.04.2024

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

 




திருக்குறள்: 

"பால்: பொருட்பால். 

இயல்: அரசியல். 

அதிகாரம்: கல்வி


குறள்:391

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.


விளக்கம்:

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.


பழமொழி :

Speech is silver, silence is golden


அமைதியே ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது


இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 


2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.


பொன்மொழி :

தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் உள்ள வாய்ப்பை பார்க்கின்றார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பிரச்சனையை பார்க்கிறார்கள்.


பொது அறிவு : 

1. செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட்ட ஆண்டு?

விடை: 2008, மே 19


2. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?

விடை: மியான்மர் 


English words & meanings :

 Fame - renown; புகழ். 

 Feckless - not responsible; பொறுப்பற்ற.


ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை : வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காய கொப்ளங்களுக்கும் இக்கீரையை அரைத்து தடவலாம். உடலில் உள்ள கொழுப்பு  கரையும்.


நீதிக்கதை

 விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.

அடர்ந்த வனப் பகுதியில் தனது ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு விட்டு, விட்டு ஒரு மரத்தின் அடியில் காணப்பட்ட நிழலில் உறங்கிக் கொண்டு இருந்தான் ஒரு இடையன்.


அப்பொழுது வானத்தில் ஒரு கழுகு தனது இரையைத் தேடியபடி வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. அந்தக் கழுகு இந்த இடையனின் ஆட்டு மந்தையில் இருந்த ஒரு ஆட்டுக் குட்டியை கண்டது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் விரைந்து வந்து அதனை தூக்கிக் கொண்டு பறந்தது.


இந்தக் காட்சியை வெகு நேரமாக ஒரு காகம் பார்த்துக் கொண்டு இருந்தது. கழுகைப் போலவே செயல்பட்டு தானும் அந்த மந்தையில் இருக்கும் ஆட்டுக் குட்டிகளில் ஒன்றை தூக்கி வர வேண்டும் என விருப்பம் கொண்டது. ஆனால், கழுகின் சக்தி என்ன, தனது சக்தி என்ன என்பதை அந்தக் காகம் சிந்திக்க மறந்தது.


இடையனோ நல்ல நித்திரையில் இருந்தான்.


அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி அந்தக் காகம் ஆட்டு மந்தைக்குள் விரைந்து புகுந்தது. ஒரு சிறு ஆட்டுக் குட்டியை தேர்ந்தெடுத்து அதன் மேல் அமர்ந்து தனது நகம் கொண்டு அதனை பலமாகப் பற்ற நினைத்தது. எனினும், அந்த ஆடு ஒரு குட்டி ஆடாகவே இருந்தாலுமே கூட, அதன் ரோமம் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் அந்தக் காகத்தால் அந்த ஆட்டை பற்றிக் கொள்ள இயலவில்லை. பிறகு மிகவும் சிரமப்பட்டு தனது நகங்களை மெல்ல அதன் ரோமங்களுக்குள் விட்டு பற்றிக் கொண்டது. ஆனால், ஆட்டுக் குட்டி மிகவும் கனமாக இருந்ததால் அந்தக் காகத்தால் அதனை தூக்க முடியவில்லை. அதனால் தப்பித்தால் போதும் என அந்த ஆட்டுக் குட்டியை விட்டு, விட்டுப் பறந்து செல்ல நினைத்தது.


ஆனால், அந்தக் காகத்தின் கால்கள் அந்த ஆட்டுக் குட்டியின் ரோமங்களில் நன்றாக சிக்கிக் கொண்டதால், காகம் தனது கால்களை வெளியே எடுக்க முயற்சி செய்யும் போது அந்த ஆட்டுக் குட்டிக்கு வலி எடுத்தது. அதனால் அந்த ஆட்டுக் குட்டி கத்தியது. காகமும் தப்பிக்க முடியாமல் வசமாக மாட்டிக் கொண்டு கரைந்தது. இதனால் அந்த ஆட்டு மந்தைகளில் இருந்த அனைத்து ஆடுகளும் நடப்பது


அறியாது பயம் கொண்டு கனைத்தது. இதனால் அந்த இடமே பேர் இரைச்சல் அடைந்தது.


இடையன் இந்தப் பேர் இரைச்சலைக் கேட்டு, "தனது ஆடுகளுக்கு என்ன நேர்ந்ததோ!" என்று பயந்து கண் விழித்துக் கொண்டான். பிறகு அவன் நடந்ததை அறியாது சுற்றி, சுற்றி என்ன ஏது என்று பார்த்தான். உடனே தனது ஆட்டை நகங்களால் காயப்படுத்திக் கொண்டு இருந்த அந்தக் காகத்தை கண்டான். அத்துடன் அவ்விடம் நோக்கி விரைந்து ஓடி வந்தான். பிறகு தனது தடியால் அந்தக் காகத்தை அடித்தே கொன்றான்.


பாவம் அந்தக் காகம் தனது சக்திக்கு மீறிய செயலைச் செய்யப் போய் பரிதாபமாகத் தனது உயிரை விட்டது.


நீதி : எப்போதுமே விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.


இன்றைய செய்திகள் - 05.04.2024


*வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு.


*கோடைகால வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தயாராகும் சென்னை மக்கள்; விமான கட்டணம் அதிகரிப்பு.


*12 ஆம் வகுப்பு வரலாற்று பாடத்தில் 

ஹரப்பா நாகரீகம் குறித்து புதிய மாற்றம்- என் சி இ ஆர் டி.


*முதியவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.


*மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.


Today's Headlines

* Tamil Nadu Government has declared a public holiday on April 19, the polling day.


 *Chennai people are getting ready to have a summer  tour abroad; this leads to  increase in Airfare.


 *In 12th class History

 A new correction on the Harappan Civilization- NCERT.


 *Postal voting for senior citizens has started.


 *India's Yuki Bhambri pair advance to quarterfinals of Grand Prix Hassan Tennis men's doubles in Morocco.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent