இந்த வலைப்பதிவில் தேடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு - மறு மதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் - 2,328 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்

வியாழன், 20 ஜூன், 2024

 




பிளஸ் 2 தேர்வு முடிவில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரியவர்களில் 2,328 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் வந்துள்ளது.



இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் நகல் பெற 49,245 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். விடைத்தாள் நகல் பெறாமல் மறுகூட்டலுக்கு நேரடியாக 1,540 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 19 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் மறுகூட்டலுக்கு 175 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 131 மாணவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் வந்துள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய 3,632 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 2,178 பேருக்கு மதிப் பெண்களில் மாற்றம் வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2,328 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் வந்துள்ளது. மேலும், விடைத்தாள் திருத்தலின் போது தவறிழைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent