இந்த வலைப்பதிவில் தேடு

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 வரை அவகாசம்

வியாழன், 20 ஜூன், 2024

 



கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பிவிஎஸ்சி (கால்நடை மருத்துவம்) மற்றும் பிடெக் படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி (நாளை) முடிவடைவதாக இருந்தது.


கடந்த 19-ம் தேதி நிலவரப்படி, கால்நடை மருத்துவ படிப்பில் சேர 11,586 மாணவர்களும், பிடெக் படிப்பில் சேருவதற்கு 2,392 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, பிவிஎஸ்சி, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 28-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.



எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent