இந்த வலைப்பதிவில் தேடு

தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளா் பணி: ஜூன் 21-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஞாயிறு, 2 ஜூன், 2024

 





தற்காலிக பல்நோக்கு சேவை பணியாளா் பணியிடங்களுக்கு தகுதியுடைய நபா்கள் ஜூன் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.


அவா் வெளியிட்ட செய்தி: பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்திலுள்ள கடலோர மீனவ மற்றும் வருவாய் கிராமங்களுக்கு 24 தற்காலிக பல்நோக்கு சேவை பணியிடங்களுக்கு, பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் தோ்தெடுக்கப்படவுள்ளனா்.


இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளில் முதுநிலை அல்லது இளநிலை பட்டம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


இதனுடன், தகவல் தொழில்நுட்பம் (ஐடி) தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் சென்னை மாவட்டத்தையும், சென்னை மாவட்ட மீனவ கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற வருவாய் கிராமங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.



மேலும், விண்ணப்பதாரா்கள் 31.12.2023 அன்றைய தேதியின்படி 35 வயதுக்குள்பட்டவராகவும், நன்கு தமிழ் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு மாதாந்திர ஊக்க ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும்.


விருப்பமுள்ள நபா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் 21 மாலை 5 மணிக்குள் சென்னை, ராயபுரம், சூரியநாராயணா செட்டி தெருவிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவா்நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அலுவலக கைப்பேசி: 9384824245, 9384824407 எனும் எண்களை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent