இந்த வலைப்பதிவில் தேடு

வார ராசிபலன் 14-07-2024 முதல் 20-07-2024 வரை

திங்கள், 15 ஜூலை, 2024

 




12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்

இந்த வார ராசிபலன்:


மேஷம்


மதிப்பு மரியாதை அதிகரிக்கும் வாரம் இது. சொல்வாக்கும், செல்வாக்கும் மனதில் நம்பிக்கையை உருவாக்கும். சுலபமான காரியங்களை கூட அதிகமுயற்சி எடுத்து செய்ய வேண்டியதாக இருக்கும். காரியவெற்றி பெற இந்தவாரம் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும். தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், கலைத்துறையினர் ஆகியோருக்கு உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக அமையும். பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரம் இது. நண்பர்கள்,உறவினர் வருகையால் வீடுகள் கலகலப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட், விவசாய துறையினருக்கு லாபகரமான காலகட்டம். நீண்ட நாட்களாக திட்டமிட்ட விஷயங்கள் நல்ல விதமாக இந்த வாரம் நடந்து முடியும்.


ரிஷபம்


பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் வாரம் இது. உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரியல்எஸ்டேட் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு இது அதிர்ஷ்டகரமானவாரம். அனைத்துதரப்பினருக்கும் உழைப்புக்கேற்ற நன்மைகள் கிடைக்கும் காலகட்டம். மருத்துவசிகிச்சை பெறுபவர்கள்,பெண்மணிகள்தங்களுடைய உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பார்த்த பொருளாதாரம் வீடுவந்து சேரும். இல்லத்தரசிகளின் மனதில் மகிழ்ச்சி நிலவும். இந்தவாரம் இரவு பயணங்களை தவிர்த்து விடுவதே பாதுகாப்பானது.


மிதுனம்


பொருளாதார நிலைமேம்படும் காலகட்டம் இது. வியாபாரிகள், தொழில்துறையினர் புதியமுதலீடுகள் செய்வதை சிறிதுகாலம் தள்ளிவைக்க வேண்டும். ரியல்எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்தலாபத்தை பெறுவார்கள். கலைத்துறையினருக்கு புதியவாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தரசிகள் விரும்பிய அணிமணிகளை வாங்கிமகிழ்வார்கள். சிலருக்குவீடு, மனை அமையும்யோகம் உண்டு.வெளிநாடுகளிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்திகள் வந்துசேரும். ஏற்றுமதிதுறையினருக்கு லாபகரமானவாரம் இது. ஷேர்மார்க்கெட் எதிர்பார்த்த ஆதாயத்தைதரும். சுபச்செலவுகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சேமிப்பு உயரும் காலகட்டம்.


கடகம்


ஆன்மீக எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும் வாரம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் ஆகிய துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். அலைச்சலுக்கு ஏற்ப நன்மைகள் கிடைக்கும் காலகட்டம். விவசாயத்துறையினருக்கு அனுகூலமானவாரம். இல்லத்தரசிகள் நீண்ட நாட்களாக வாங்கநினைத்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையினர் புதிய அவதாரம் எடுப்பார்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய பகையை மறந்து உறவுகள் ஒன்றாக கூடிமகிழும் காலகட்டம். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். பழைய கடன்கள் அடைபடும். நல்லவிஷயங்களில் இருந்தகாரியத்தடைகள் நீங்கும்.


சிம்மம்


புதிய நம்பிக்கைகள், வாய்ப்புகள் வீட்டுக்கதவை தட்டும் காலகட்டம் இது. தொழில்துறையினர், உத்தியோகஸ்தர்கலுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேறுவேலைக்கு மாறலாம் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களை நம்பாமல் வியாபாரிகள் தாங்களே களத்தில் இறங்கி செயல்பட வேண்டியதாக இருக்கும். ரியல்எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவார்கள். கலைத்துறையினர் புதியதொடர்புகளை பெற்றுமேன்மை அடைவார்கள். இந்தவாரம் வரவைவிட செலவுகள் கூடுதலாக இருக்கும். இல்லத்தரசிகள் அனைவரிடமும் பொறுமையாக இருக்கவேண்டும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கணக்குவழக்குகளில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு வாய்ப்பு கைகூடிவரும்.


கன்னி


லாபகரமான வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், தொழில்துறையினர் உற்சாகமாக செயல்படுவார்கள். ரியல்எஸ்டேட் மற்றும் ஷேர்மார்க்கெட் ஆகியவை எதிர்பார்த்த லாபத்தை தரும். குடும்பத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடப்பதற்கான சூழல் உருவாகும். சிலருக்கு வெளிநாட்டு பயணவாய்ப்பு கிடைக்கும். அனைத்துதரப்பினருக்கும் இந்தவாரம் கைகளில் எதிர்பார்த்த பணம் புரளும்.வர வேண்டிய பணம் வந்துசேரும். கலைத்துறையினருக்கு அதிர்ஷ்டகரமான வாரம். இல்லத்தரசிகளுக்கு பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப பெரியவர்களது ஆலோசனைகள் மூலம் பலதடைகள் அகலும்.


துலாம்


திட்டமிட்டு நிதானமாக செயல்பட வேண்டிய வாரம் இது. தொழில்துறையினர் உற்பத்தியில் தடை தாமதங்களை சந்திப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை கவனமாகச் செய்யவேண்டும். ஷேர்மார்க்கெட்துறையில் உள்ளவர்கள் இந்தவாரம் துணிகர முதலீடுகளை செய்ய வேண்டாம். மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் வழக்கத்தைவிட கவனமாக இருக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் இரவு பயணங்களை முற்றிலும் இந்தவாரம் தவிர்த்து விடுதல் நல்லது. கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, முதலீடு செய்வது ஆகிய விஷயங்களை சிறிது காலத்துக்கு தள்ளிவைக்க வேண்டும். அரசியல் மற்றும் அரசு காரியங்கள் அனுகூலமாக இருக்கும். அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய வாரம் இது.


விருச்சிகம்


முயற்சிகள் வெற்றி பெறும் காலகட்டம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள், தொழில்துறையினர் எதிர்பார்த்தலாபத்தை அடைவார்கள். கலைத்துறையினர் புதுவாய்ப்புகளை பெறுவார்கள். விவசாயம், ரியல்எஸ்டேட் துறையினர் உழைப்புக்கேற்ற லாபத்தை அடைவர். எதிர்பாராத திடீர்பயணங்களால் பல நல்ல விஷயங்கள் நடக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணை மற்றும் அவர்களது குடும்பத்தார் மூலம் நன்மைகள் ஏற்படும். ஒருசிலருக்கு புதியநண்பர்கள் தொடர்பு ஆதாயத்தை ஏற்படுத்தும். இல்லத்தரசிகள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். அரசியல் மற்றும் அரசாங்க காரியங்களில் எதிர்பார்த்த ஆதாயம்கிடைக்கும்.


தனுசு


காரியத்தடைகள் அகலும் காலகட்டம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவார்கள். தொழில்துறையினர், வியாபாரிகள் காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். ரியல்எஸ்டேட், ஷேர்மார்க்கெட் துறையினர் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். இல்லத்தரசிகள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்படாமல் எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும் .நிதி விஷயங்களில் அனைத்து தரப்பினருமே ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்பட வேண்டும். பழைய கடன்களால் மனதில் சங்கடம் ஏற்படும். ஒருசிலருக்கு வெளிநாடுகளிலிருந்து நல்லசெய்திகள்வந்து சேரும். நீண்டகாலமாக செய்து வந்த பிரார்த்தனைகள் பலிதமாகும் காலகட்டம் இது.


மகரம்


வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும் வாரம் இது. தொழில்துறையினர்புதிய முதலீடுகளை திட்டமிட்டு மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம். இருபால் நண்பர்களாலும் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சுபகாரியங்கள் நடக்கும் சூழல் ஏற்படும். வாழ்க்கைத்துணை மற்றும் அவர்களுடைய குடும்பத்தார் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டுதொடர்புகள் லாபகரமாக இருக்கும். இல்லத்தரசிகளுக்கு ஆடை, ஆபரணசேர்க்கை ஏற்படும். ஒரு சிலர் வெளியூர் தீர்த்தயாத்திரை செல்வார்கள்.


கும்பம்


கவலைகள் அகன்று தெளிவு பிறக்கும் காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணியிடமாற்றத்தை பெறுவார்கள். ஒரு சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில்துறையினர், வியாபாரிகள்திட்டமிட்டு கடினமாக உழைக்க வேண்டும். ஷேர்மார்க்கெட் துறையினர் வழக்கத்தை விட கவனமாக இருக்கவேண்டும். கடன்வாங்கும் முடிவுகளை சிறிதுகாலம் ஒத்திவைக்கவும். கலைத்துறையினர் ஒன்றுக்கு இரண்டுமுறை முயற்சித்த பின்னரே வாய்ப்புகள் கை கூடி வரும். ஒரு சிலர் வங்கிகடன் பெற்று புதியவீடு, மனைவாங்குவார்கள். நீண்டகாலமாக தடைபட்ட நல்ல விஷயங்கள் தடை தாமதங்களோடு அனுகூலமாகமுடியும். இல்லத்தரசிகள் வழக்கம்போல் அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும்.


மீனம்


முயற்சிகள் நல்ல பலன்களை தரும் வாரம் இது. மனதில் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில்துறையினருக்கு எதிர்பாராத புதிய செலவினங்கள் ஏற்படும். வியாபாரிகள் பணப்பரிவர்த்தனைகளில் வழக்கத்தை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவசிகிச்சை பெறுபவர்கள், முதியோர்கள், மின்சாரபணியாளர்கள் இந்த வாரம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லத்தரசிகள் மின்சார உபகரணங்களை கூடுதல் கவனத்தோடு பயன்படுத்த வேண்டும். வாகனப்பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக வேகத்தை தவிர்த்து, பாதுகாப்பாகவாகனத்தை இயக்க வேண்டும். கடன் கொடுப்பது, கடன்வாங்குவது ஆகியவற்றை சிறிது காலம் ஒத்தி வைக்கவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent