இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளியில் மதிய உணவு அருந்திய 25 மாணவர்கள் மயக்கம்

செவ்வாய், 2 ஜூலை, 2024

 



சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை அரசு நடுநிலை பள்ளி குழந்தைகள் 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் சமைத்த மதிய உணவில் பூரான் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வரகூர்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல இன்று மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்ற நிலையில் 25 மாணவர்களுக்கு திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.


பள்ளியில் சமைத்த மதிய உணவில் பூரான் இருந்ததால்தான் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது என கூறப்படுகிறது. மாணவர்கள் மயக்கமடைந்த தகவல் பள்ளி ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


மாணவர்கள் பாதிக்கப்பட்ட தகவலறிந்து பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent