இந்த வலைப்பதிவில் தேடு

அரசு கலை, கல்லூரிகளில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு: கல்லூரி கல்வி இயக்குநர்

செவ்வாய், 2 ஜூலை, 2024

 




அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில இதற்கு முன் விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5-ம் தேதி வரை TNGASA என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறொரு பாடப்பிரிவில் சேர விரும்பினால், காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த மே 5ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் http://www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மூலமாகவும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.


இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடந்தாண்டு போலவே மாணவர்கள் தாங்கள் விரும்பம் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்த பின்னர், ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது.


கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், 2ம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில இதற்கு முன் விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


நாளை முதல் 5-ம் தேதி வரை TNGASA என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறொரு பாடப்பிரிவில் சேர விரும்பினால், காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent