இந்த வலைப்பதிவில் தேடு

அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு.

செவ்வாய், 2 ஜூலை, 2024

 




தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்ய ஆணையிட்டுள்ளார். பானி பூரிக்கான மசாலா நீரில் பச்சை நிற நிறமி சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தநிலையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி உள்ளது. முதலில் இந்த உணவு வட மாநிலங்களில் மக்களின் விரும்பப்படும் உணவாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த உணவு வட மாநில மக்கள் மூலம் தமிழகத்தில் வந்தது. இதன் மூலம் தமிழகத்திலும் பானி பூரியை மக்களின் விரும்பத்தக்க உணவாக மாறியது.


பானி பூரி குறித்து தவறான கருத்துக்கள் வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் மக்கள் அதனை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் பானி பூரி சாப்பிடும் மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று கர்நாடக உணவு பாதுகாப்புதுறை தெரிவித்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent