இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கம்

புதன், 17 ஜூலை, 2024

 




அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று துறை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கம் நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 


நமது பெருமைமிக்க கலை மற்றும் தொல்லியல் தொடர்பான வரலாற்றை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் வரலாற்று துறை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் விதமாக வரும் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் “நமது கலை மற்றும் தொல்லியல் அறிவோம்” என்கிற தலைப்பில் பயிலரங்கம் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடக்கிறது. 


இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் வரலாற்று துறையில் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம். இரண்டு நாள் நிகழ்விலும் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent