சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920-க்கு விற்பனையானது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.3,100 குறைந்தது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து 2-ஆவது நாளாக கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,490-க்கும், பவுனுக்கு ரூ. 480 குறைந்து ரூ.51,920-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.92-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.500 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் கட்டி வெள்ளி கிலோ ரூ.1 லட்சத்துக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக