திருச்சி அரசு பள்ளி மாணவர்கள் மோதலை தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணவர் ஒருவன் மற்றொரு மாணவன் குறித்து இன்ஸ்டாகிராமில் கிண்டலடித்து புகைப்படம் பதிவிவேற்றினார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆத்திரமடைந்து சில அடியாட்கள் மற்றும் அரிவாளுடன் பள்ளிக்குள் புகுந்து அந்த மாணவரை தாக்கினார். இதனால் அங்கு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது மாணவர்கள் மோதலை சிவக்குமார் என்ற ஆசிரியர் தடுக்க முயன்றார். இதில் ஆசிரியர் சிவக்குமாருக்கு தலையில் வெட்டுக்காயம் விழுந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி சிங்கர் கோவில் தெருவில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த ஆசிரியர் சிவக்குமார், தகராறை தடுக்க சென்றார். இதில் ஆசிரியரை தலையிலும், ஒரு மாணவரின் கையிலும் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடி விட்டனர்.
இதில் காயம் அடைந்த இருவரையும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த வீடியோவுக்கு எதிராக மற்றொரு மாணவர் கமெண்ட் செய்ததால் தகராறு ஏற்பட்டதாக தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக