இந்த வலைப்பதிவில் தேடு

செப்., 14ல் TNPSC Group 2 தேர்வு

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

 




குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு அறிவித்தபடி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி., விளக்கம் அளித்துள்ளது.


டி.என்.பி.எஸ்.சி., குரூப்2, 2ஏ பணியிடங்களில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 7 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.


தேர்வுக்கூட அனுமதிச் சீட்டான ஹால் டிக்கெட் இன்னும் சில தினங்களில் வினியோகிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் இருந்த நிலையில் அவர்கள் மத்தியில் ஒரு புதிய குழப்பம் எழுந்தது.


2 நாட்கள் முன்பாக டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அட்டவணையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதிகள் வரும் செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் விண்ணப்பித்த தேர்வர்கள் மத்தியில் குழப்பம் காணப்பட்டது. எந்த தேதியில் தேர்வு நடக்கிறது என்பதை டி.என்.பி.எஸ்.சி., தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.


இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் 2, குரூப் 2ஏ முதல் நிலைத்தேர்வு அறிவித்தபடி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., விளக்கத்தை தொடர்ந்து தேர்வர்கள் குழப்பம் நீங்கி, நிம்மதி அடைந்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent