உத்திரபிரதேசத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால் 69 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமனற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் மாநிலம் முழுதும் 69 ஆயிரம் துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு பெற்ற பணி நியமனம் பெற்றனர். இந்நியமனத்தி்ல் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் அரசு விதிமுறைகளின்படி பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், 69 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து, இட ஒடுக்கீடு அடிப்படையில் 3 மாதங்களுக்குள் புதிய பட்டியலை தயாரிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக