இந்த வலைப்பதிவில் தேடு

அரசு மாணவர் விடுதிகளில் 497 வார்டன் பணியிடங்கள் - ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

சனி, 16 நவம்பர், 2024

 



பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வி இயக்குனர் அழைப்பு


பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர்/ காப்பாளினி பணியிடத்திற்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;


தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழுள்ள 1351 விடுதிகளில் தற்போது 497 காப்பாளர்/ காப்பாளினி பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவ்விடுதிகளை சிறந்த முறையில் நிர்வகிப்பதில் சுணக்கம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு மாவட்டங்களில் இத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாகவுள்ள பட்டதாரி காப்பாளர்/ காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர்/ காப்பாளினி பணியிடங்களில் பணிபுரிய பள்ளிக்கல்வித் துறையின் கீழ் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ ஆசிரியைகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நிரப்புவதற்கு ஆவண செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் தங்கள் மாவட்டங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்/ ஆசிரியைகள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர்/ காப்பாளினி பணியிடங்களில் பணியாற்ற விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட பணியிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகள் பின்வருமாறு;


இடைநிலை காப்பாளர்/ காப்பாளினி – இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்பு (D.T.Ed)


போதக காப்பாளர்/ காப்பாளினி – இளங்கலை கல்வியியல் (B.Ed with any degree)


எனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாகவுள்ள 497 காப்பாளர்/ காப்பாளினி பணியிடங்களுக்குச் செல்ல விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பள்ளிக்கல்வித் துறையிலிருந்து தடையின்மைச் சான்று பெற கருத்துக்களைப் பெற்று உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent