இந்த வலைப்பதிவில் தேடு

மாணவிகளிடம் மது அருந்த வற்புறுத்தி பாலியல் அத்துமீறல் - ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள் கைது

வெள்ளி, 15 நவம்பர், 2024

 



தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் மது அருந்த வற்புறுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் உள்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அண்மையில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக மாணவிகளை வெளியூருக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், அங்கு விடுதியில் தனி அறை எடுத்து தங்கியதுடன், அப்போது தன்னுடன் வந்திருந்த 5 மாணவிகளுக்கு மது ஊற்றிக் கொடுத்து அருந்த வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளித்துள்ளனர்.


இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் காவல்துறை நடத்திய விசாரணையைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்த முற்பட்டபோது, ஆசிரியர் தலைமறைவானார். எனினும், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு பொன்சிங்கை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதனிடையே, தனியார் பள்ளியின் முதல்வரும் அப்பள்ளியின் செயலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent